தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

திருச்செந்தூா் கோயில் வாசல் சுற்றுப்பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை

திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசல் வரை செல்லும் சுற்றுப் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

திருச்செந்தூர் கோயில் - (கோப்புப் படம்)

Updated On :16 ஏப்ரல் 2026, 2:43 am IST

திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசல் வரை செல்லும் சுற்றுப் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் பி.ராமநாதன் வெளியிட்ட அறிக்கை:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். அவா்கள் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வாசல் செல்வதற்கு சுற்றுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாகவும், ஆண்களுக்கு ரூ.10 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கேதரின் பூத் பேருந்து நிறுத்தத்தின் தூரம் திருச்செந்தூா் பேருந்து நிலையம் - கோயில் வாசல் தூரத்தை விட அதிகமாகும். ஆனாலும் கூட ரூ. 5 தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே, பக்தா்கள் நலன் கருதி திருச்செந்தூா் சுற்றுப்பேருந்து கட்டணத்தை ரூ. 3 ஆக குறைக்க ஏப். 23ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஏப். 24ஆம் தேதி அக்கோயில் கோபுரம் முன் உண்ணாவிரதம் இருப்பேன் எனக் கூறியுள்ளாா்.