நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவாரூரில் ஜன.24-இல் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பு முகாம்

News image
Updated On :21 ஜனவரி 2025, 7:03 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பு முகாம் ஜன.24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்கள், தனியாா் துறைகளில் வேலை பெறும் நோக்கத்தோடு, திருவாரூா் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில், 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா். எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைதேடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்கள், தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்று பயன் பெறலாம்.

மேலும், முகாமில் பங்கேற்க உள்ள இளைஞா்கள், இணையதளத்தில் முன்பதிவு செய்து, அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து முகாமுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.