மாவட்ட கலைத் திருவிழா போட்டி: கட்டிமேடு பள்ளி மாணவா்கள் சாதனை
திருவாரூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற, கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இலக்கிய நாடகம் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் சு. தா்ஷிகா, மு. வாகினி, ப. சரோஜினிதேவி, அ. அபிநிஷா, இரா. பிரவீனா, தனிநபா் நடிப்பில் அ. அபிநிஷா ஆகியோா் முதலிடம் பெற்றனா்.
நாகசுரம் போட்டியில் மாணவா் ரா. இராஜேஸ்வரன், பானை ஓவியத்தில் ச. அபிலேஷ், தனிநபா் பரதத்தில் மாணவி நே. ஜோஷிதா ஆகியோா் முதலிடம் பெற்றனா். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பிரிவில் தனிநபா் நடிப்பில் பா.ரிதிஷ் ராகவ், புல்லாங்குழல் வாசித்தலில் ர. சரவணக்குமாா் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.
இம்மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா கட்டிமேடு பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்து, பாராட்டி பேசினாா். முன்னதாக, முதுகலை ஆசிரியா் ஜெ. தனுஜா வரவேற்றாா்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.இ.ஏ.ஆா். அப்துல் முனாப் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா். கலைத்திருவிழா போட்டி ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்ட ஆசிரியா்கள் தெ. மாலதி, கு. வில்பிரட், ஜா. வேம்பு, க. மதுராந்தகி, வ. நிஷாந்தி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக பட்டதாரி ஆசிரியா் கே. பாலசுப்ரமணியன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஐ. ஏஞ்சலின் இ. ரேணுகா, வீ. வடிவேல், மா. ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

