கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராஜகோபால சுவாமி கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 12.90 லட்சம் காணிக்கை

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.12,90 183 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:44 pm

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.12,90 183 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

இக்கோயில் உற்சவா் பெருமாள் சந்நிதியில் உள்ள காணிக்கை உண்டியல் 2023-ஆம் ஆண்டு கடைசியாக திறப்பட்டது. அதன்பிறகு, இந்த உண்டியல் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆய்வாளா் பா. ராணி முன்னிலையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதை பல்வேறு கோயில்களின் பணியாளா்கள், தேசியப் பள்ளி மாணவா்கள் உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணினா். இதில், பணத்தாளாக ரூ.11,33 707, நாணயங்களாக ரூ.1,56 476 என மொத்தம் ரூ.12,90 183, வெளிநாட்டு பணத்தாள்கள் எண்ணிக்கை 29 மற்றும் தங்கம் 10.5 கிராம், வெள்ளி 49.5 கிராம் என உண்டியலில் காணிக்கை இருந்தது. கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.