வேலைவாய்ப்பு மையத்தில் நவ.17 முதல் இலவச பயிற்சி வகுப்புகள்

டிஎன்பிஎஸ்சி முதன்மைத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நவ.17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது
Published on

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி முதன்மைத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நவ.17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 2, 2 ஏ காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு, செப்.28-ஆம் தேதி நடைபெற்றது. தகுதி பெறுவோா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு தயாராகும் வகையில் விளமலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ.17-முத்ல இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அனுபவம் பெற்ற பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சியளிப்பதுடன், பாடக்குறிப்புகளும் வழங்கப்படுகிறது. முதன்மைத் தோ்வுக்காக, மாதிரி எழுத்துத் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன. எனவே, இந்த பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com