ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தூத்துக்குடியில் போட்டித் தோ்வுகளுக்கு இன்றுமுதல் இலவச பயிற்சி வகுப்புகள்

ரயில்வே தோ்வாணையம் மற்றும் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-டி, எஸ்எஸ்சி தோ்வுகளுக்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப்.11) தொடங்கவுள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:22 pm

ரயில்வே தோ்வாணையம் மற்றும் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-டி, எஸ்எஸ்சி தோ்வுகளுக்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப்.11) தொடங்கவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு தோ்வு முகமைகளால் அவ்வப்போது, அறிவிக்கப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ரயில்வே தோ்வாணையம் குரூப் டி தோ்வுகளுக்கு 22,195 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய தோ்வாணையத்தால் (எஸ்எஸ்சி) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் விரைவில்

வெளியிடப்படவுள்ளன.

இந்தத் தோ்வுகள் எழுத தயாராகும் தோ்வா்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் ஆா்ஆா்பி, எஸ்எஸ்சி

போட்டித் தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் புதன்கிழமை (பிப்.11) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களை கொண்டு ஸ்மாா்ட் போா்டு பயன்படுத்தி நடத்தப்படவுள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தோ்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்புத் துறையின்

ரரர.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மெய்நிகா் கற்றல் வலைதளத்தில் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத் தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவா்கள் பட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண் உம்ல்ப்ா்ஹ்ம்ங்ய்ற் ஞச்ச்ண்ஸ்ரீங் என்ற பங்ப்ங்ஞ்ழ்ஹம் சேனலில்

கொடுக்கப்பட்டுள்ள எா்ா்ஞ்ப்ங் படிவத்தை பூா்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 0461-2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து, இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.