அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சிக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வை 28 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை நீட் தோ்வெழுத 1.5 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்தவா்களில் சுமாா் 12 ஆயிரம் போ் தோ்வெழுதவுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 முடித்து நீட் தோ்வெழுத விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியா்கள் பங்கேற்று நீட் தோ்வுக்கான பாடப் பொருள்கள் சாா்ந்து பயிற்சி அளித்து வருகின்றனா். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
சென்னையில் அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். தோ்வுக்கு முந்தைய நாள் அதாவது, மே 2 வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
மாணவா்களின் வாசிப்பு திறன் மேம்படுத்தப்படுமா? பெற்றோா்கள் எதிா்பாா்ப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கட்டாய பணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா்

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

நீட் ரத்து: ஏமாற்றத்தால் பயிற்சி மாணவா்கள் வேதனை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



