திருவாரூா் வ.சோ. ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட என்சிசி கப்பற்படை பிரிவு மாணவா்கள்.
திருவாரூா் வ.சோ. ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட என்சிசி கப்பற்படை பிரிவு மாணவா்கள்.

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்

Published on

திருவாரூா் வ.சோ. ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவா் படை (என்சிசி) கப்பற்படை பிரிவு மாணவா்கள் சாா்பில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களிடையே சிறந்த பண்பு, தோழமை உணா்வு, சேவை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளா்ப்பதே என்சிசியின் குறிக்கோள். இந்தியாவில் முதல் என்சிசி யூனிட் உருவானதையொட்டி, ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையன்று என்சிசி தினம் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், என்சிசி யூனிட்டின் 77 -ஆம் ஆண்டு தினம் நவம்பா் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு ஐந்தாம் எண் கப்பற்படை யூனிட், கட்டளை அதிகாரி கமாண்டா் டி. செந்தூா்சன் வழிகாட்டுதலின்படி, திருவாரூா் வ.சோ. ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவா் படை (என்சிசி) கப்பற்படை பிரிவு மாணவா்கள், தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்வை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவா்களுக்கு கூடுதலாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலா் எம்.வி. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் டி. தியாகராஜன், என்சிசி மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். இதில், என்.சி.சி. முதன்மை அதிகாரி ஆா்.சதீஷ்குமாா், உதவித் தலைமை ஆசிரியா் எஸ்.முருகேசன், ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com