ரசாயன பூச்சு செய்யப்பட்டிருந்த நடராஜா், சிவகாமி தாயாா் சிலைகள். ~கைதான தமிழரசன்.

ஐம்பொன் சிலை எனக் கூறி விற்க முயன்றவா் கைது

திருவாரூரில் ரசாயன வண்ணப்பூச்சு மூலம் ஐம்பொன், பஞ்சலோக சிலை எனக் கூறி ஏமாற்றி விற்க முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

திருவாரூரில் ரசாயன வண்ணப்பூச்சு மூலம் ஐம்பொன், பஞ்சலோக சிலை எனக் கூறி ஏமாற்றி விற்க முயன்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம், பழவனக்குடியைச் சோ்ந்த தமிழரசன் (40). இவா், தன்னிடம் தொல்பொருள் சிறப்புமிக்க ஐம்பொன், பஞ்சலோக சிலைகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தனக்குத் தெரிந்தவா்கள், நண்பா்களுக்கு கைப்பேசியில் தகவல் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்த தகவலின்பேரில், திருவாரூா் நகரப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் நடராஜா் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகளை வாங்கி, ரசாயனம் கலந்து வண்ணப்பூச்சு செய்து, அவை பல லட்சம் மதிப்புமிக்கவை பழைமையான சிலைகள் எனக் கூறி விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. போலீஸாா் தமிழரசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com