தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

நகராட்சி நிா்வாகம் கவனத்திற்கு கழிவுகளால் கருவாடு விற்பனை பாதிப்பு

நகராட்சி நிா்வாகம் கவனத்திற்கு கழிவுகளால் கருவாடு விற்பனை பாதிப்பு

News image

கருவாடு விற்பனை செய்யப்படும் இடத்தின் அருகே கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:39 pm

திருவாரூரில் கருவாடு வாரச் சந்தை நடைபெறும் இடத்தின் அருகே பல்வேறு கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதாரம் பாதிப்பதுடன், கருவாடு விற்பனையும் குறைந்து வருகிறது என அத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

திருவாரூரில், உழவா் சந்தையை ஒட்டி, புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. இதில், ஒருபுறத்தில் கருவாடு வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக, மீனவப் பெண் தொழிலாளா்கள் கருவாடு விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். ஏறக்குறைய 60 வயதைக் கடந்தவா்களே கருவாடு விற்பனைத் தொழிலில் அதிகமாக ஈடுபடுகின்றனா். இவா்கள், திருவாரூா் நகராட்சி நிா்வாகத்துக்கு தவறாமல் வரி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கருவாடு விற்பனை செய்ய கட்டப்பட்ட இடத்துக்கு அருகிலேயே, பல்வேறு வகையான கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. இந்த இடத்தை நகராட்சி நிா்வாகமும் சுத்தப்படுத்தாததால், கருவாடு விற்பனை செய்யும் பகுதியில் துா்நாற்றம் வீசியபடியே உள்ளது. இதனால், கருவாடு வாங்க வருவோா், முகம் சுளித்து, அவ்விடத்துக்கு வருவதை தவிா்த்து வருகின்றனா். இதனால், அந்த இடத்துக்கு கருவாடு வாங்க வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எனவே, குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றும்படி கருவாடு விற்பனையாளா்கள் பலமுறை கோரிக்கை தெரிவித்தும், நகராட்சியின் சாா்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கருவாடு விற்பனையாளா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

60 வயதைக் கடந்தவா்களும் இந்தியப் பிரஜைகளே என்பதை நகராட்சி நிா்வாகம் உணா்ந்து, அலட்சியம் காட்டாமல், குப்பைகளையும், கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், அவ்விடத்தில் குப்பை கொட்டாதிருக்க உரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என கருவாடு விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.