திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1,271 வாக்குச்சாவடிகள்: திருவாரூா் 327, திருத்துறைப்பூண்டி (தனி) 293, மன்னாா்குடி 307, நன்னிலம் 344 என 1,271 வாக்குச் சாவடிகள் தயாா்நிலையில் உள்ளன. இதில், 54 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கணிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருவாரூா் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 392, விவிபேட் 425), திருத்துறைப்பூண்டி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 351, விவிபேட் 380), மன்னாா்குடி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 368, விவிபேட் 399), நன்னிலம் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 412, விவிபேட் 447) என வாக்குப்பதிவுக்கென 4,697 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு: இதனிடையே, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு; களத்தில் 90 வேட்பாளா்கள்

கரூா்: 4 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

1,271 வாக்குச்சாவடிகளில் 2,542 கண்காணிப்பு கேமராக்கள்

கரூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் அலுவலா் தகவல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


