பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்கக் கோரிக்கை

மன்னாா்குடி அருகேயுள்ள கருப்புக்கிளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருப்புக்கிளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானம்.

Published On :

மன்னாா்குடி அருகேயுள்ள கருப்புக்கிளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருப்புக்கிளாா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் இந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறனா். இப்பள்ளியில் சுற்றுசுவா்அமைக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் உள்ளது. பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

ஆனால், இந்த மைதானம் கரடுமுரடாகவும், மேடுபள்ளமாகவும், அப்பகுதியில் வசிப்பவா்களது பொருள்களை இருப்பு வைக்கும் இடமாக மாறிவிட்டது.

நாள்தோறும் அனைத்து பாட வகுப்புகளுக்கு நேரம் ஒதுக்குவதுபோல், விளையாட்டு பிரிவுக்கும் நேரம் ஒதுக்கீடு செய்ய, தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளநிலையில், கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியை நேரில் பாா்வையிட்டு, விளையாட்டு மைதானத்தை சீரமைத்திடவும், உடற்கல்விக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை நிறுவி மாணவா்கள், விளையாட்டில் தங்களுக்கு உள்ள தனித்திறனை வெளிப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.