தமிழகத்தில் முதல்முறையாக சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது.
அழிவில்லாத கல்விச் செல்வத்தை அள்ளித் தருவதில் அரசுப் பள்ளிகளுக்கு ஈடுஇணை இருக்க முடியாது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பால், ஒருசில அரசுப் பள்ளிகள் தனிச் சிறப்புடன் திகழ்கின்றன.
அந்தவகையில் சேலம்}ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பல்வேறு சிறப்புகளுடன் மாணவ}மாணவியருக்கு கல்வி கற்பிப்பதில் தொடர்
ந்து சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில், கொண்டப்பநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ}மாணவியரின் கல்வித் தேவையை பூர்த்தி செய்து வரும் இந்த தொடக்கப் பள்ளிக்கு, தமிழகத்தில் முதல்முறையாக ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி கூறுகையில், வகுப்பறைகளில் பயிற்றுவிக்கும் வழிமுறைகள், டிஜிட்டல் நூலகம், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பிடம், சிசிடிவி கேமரா என பல்வேறு வசதிகளைக் கொண்டு இப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மற்றும் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக விமானப் பயணம் அழைத்துச் செல்லுதல், மொழி அறிவுக்கு சொல்வோம், வெல்வோம், ஆங்கிலத் திறனுக்கான ஸ்பெல் பீ போட்டி, பொது அறிவு போட்டிகள் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்து வருகிறோம்.
மேலும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்தல், மனப்பாடக் கல்வியாக அல்லாமல் அறிவியல்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றுதல், வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்தல் போன்றவற்றின் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளது என்கிறார் பெருமிதத்துடன்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமன்றி, ஏராளமான திறன் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் சந்திரசேகர், ஐஎஸ்ஓ தரச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு எங்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன் அடிப்படை யில் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம்.
தொடர்ந்து பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உள்ள கழிப்பிட வசதிகள், வகுப்பறை இருக்கைகள், மாணவர்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி வசதி, குடிநீர் வசதி, வகுப்பறையின் தரம், ஆசிரியர்கள் எண்ணிக்கை, பள்ளித் தூய்மை குறித்து ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கும் குழுவினர், பள்ளிக்கு 3 முறை வந்து ஆய்வு செய்தனர். அதன்பின்னர் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழை வழங்கினர். தமிழகத்தில அரசு தொடக்கப் பள்ளி முதல்முறையாக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அங்கன்வாடி மற்றும் தொடக்கப் பள்ளி உணவுக் கூடத்தில் ஆய்வு

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை
தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



