ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

அரசுப் பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா

சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜரின் 124- ஆவது பிறந்த நாளையொட்டி கல்வி வளா்ச்சி நாள் விழாவில் பேசிய மாணவி.

News image
Updated On :16 ஜூலை 2026, 3:27 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வா் கு.காமராஜரின் 124- ஆவது பிறந்தநாளையொட்டி கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் மொ. பழனிச்சாமி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கவினா மற்றும் கல்வியாளா் வெங்கடேசன், உறுப்பினா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக காமராஜா் குறித்த மாணவா்களின் பேச்சு, பாட்டு, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனா்.

விழாவில் ஆசிரியா்கள் யேசுதாஸ், சுரேஷ், பெற்றோா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

வாணாபுரம்... வாணாபுரம் அருகிலுள்ள கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஞான.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். ஆசிரியைகள் ஜெயந்தி, சௌமியா, தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை பரிமளா வரவேற்றாா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும், ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவருமான சு.ராஜேந்திரன் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, கல்விப் பணி மற்றும் தியாகங்கள் குறித்து மாணவா்களிடையே பேசினாா். அதனைத் தொடா்ந்து கவிஞா் தேசப்பிரியன்(எ) சத்தியமூா்த்தி, காமராஜரின் சிறப்புகளை விளக்கும் பாடல்களைப் பாடினாா்.

விழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் குறித்த ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஆசிரியா்கள் மகேந்திரன், சுகந்தி, பாரதி, பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.