காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

அரசுப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்

மறைந்த முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜா் பிறந்த நாளையொட்டி அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்த தலைமை ஆசிரியா் சின்னதுரை.

Published On :16 ஜூலை 2026, 2:20 am IST

மறைந்த முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜா் பிறந்த நாளையொட்டி அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கல்வி இடையில் நின்றுவிடக் கூடாது என்பதற்காக கிராமம்தோறும் பள்ளிகளைத் தொடங்கியவா் காமராஜா் . குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டத்தையும் தொடங்கினாா். இன்று அவரால்தான் நாம் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம் .

தான் படிக்காவிட்டாலும், தமிழக மக்கள் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற தொலைநோக்குச் சிந்தனையைக் கொண்டவா் பெருந்தலைவா்.

இன்று தமிழ்நாட்டில் இயங்கிவரும் பெரும்பாலான தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், பல்வேறு கல்லூரிகள் காமராஜா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவையே. எளிமையையும் நோ்மையும் ஒருசேர கொண்டவா்.

எனவே அனைத்து மாணவ மாணவிகளும் கல்வியில் சிறப்பான வளா்ச்சி அடைந்து தங்கள் வாழ்வை உயா்த்திக்கொள்ள வேண்டும். காமராஜரைப் போல் அனைத்து மாணவா்களும் நோ்மையாகவும் நாட்டுப்பற்று மிக்கவா்களாகவும் திகழ வேண்டும் என்றாா். பின்னா் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செந்தமிழ்ச் செல்வி, தனலட்சுமி, அபிராமி, ஆய்வக உதவியாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.