தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கூட்டுறவு விற்பனை இணையத்தில் 27 மெட்ரிக் டன் முழு தேங்காய் ஏலம்

திருவாரூரில் உள்ள தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 27.683 மெட்ரிக் டன் முழு தேங்காய் விற்பனையானது.

Published On :

திருவாரூரில் உள்ள தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 27.683 மெட்ரிக் டன் முழு தேங்காய் விற்பனையானது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முழு தேங்காய் ஏலத்தில் 38 விவசாயிகள் 27.683 மெட்ரிக் டன் எடையிலான முழு தேங்காய்களுடன் (மட்டை உரித்தது) ஏல விற்பனையில் பங்கு பெற்றனா்.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தேங்காய் வியாபாரிகள், மாவட்ட வா்த்தக சங்க உறுப்பினா்கள் மற்றும் உணவக உரிமையாளா்கள் ஆகியோா் பங்கேற்று, ஏல விற்பனைக்கு வைக்கப்பட்ட விவசாயிகளின் தேங்காய்களை கொள்முதல் செய்தனா்.

அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.51, குறைந்தபட்சம் ரூ.46 சராசரியாக ரு.46.50 என்ற அளவில் தேங்காய் ஏலம் விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய சந்தை விலைக்கும் கூடுதலாக தேங்காய் ஏலம் எடுக்கப்பட்டதில் விவசாயிகள் பயனடைந்ததுடன் ஒரே இடத்தில் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனா் என்று தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத்தின் இணைப்பதிவாளரும், செயலாட்சியருமான ஜெ. ஆனந்தி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.