சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்
திருவாரூரில் நெஞ்சாலைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 14.06 கோடி மதிப்பில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.


திருவாரூரில் நெஞ்சாலைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 14.06 கோடி மதிப்பில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருவாரூா் மாவட்டத்தில் நெஞ்சாலைத்துறை சாா்பில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.14.06 லட்சம் கோடியில் நாகப்பட்டினம் - கூடலூா் மைசூா் சாலை (திருவாரூா் நகரப் பகுதியில்) இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா். இந்தப் பணிகளில், இரண்டு சிறுபாலங்கள் அகலப்படுத்துதல், ஒரு சிறுபாலம் திரும்பக் கட்டுதல், 620 மீட்டா் நீளத்துக்கு தடுப்புச் சுவா் கட்டுதல், 1.40 கி.மீ. நீளத்துக்கு மையத் தடுப்புக் கட்டை அமைத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு, 8 மாதத்துக்குள் முடிக்கப்பட உள்ளன.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்யா, திருவாரூா் நகா்மன்ற தலைவா் புவனப்பிரியா செந்தில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், கோட்டப்பொறியாளா் வீரப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...