நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விளையாட்டு மைதானம் கோரி உண்ணாவிரதம்

திருவாரூா் அருகே மணக்கால் அரசு உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:13 pm

திருவாரூா்: திருவாரூா் அருகே மணக்கால் அரசு உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக்கோரி மணக்கால் ஊராட்சி அலுவலகம் முன் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில், அனைத்து அரசியல் இயக்கப் பொறுப்பாளா்கள், அரசு உயா்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கோற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகி சு. தென்னரசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் துரை. சேசுராஜன், என். ராஜகோபால், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எம். கோமதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.