நாம் தமிழா் கட்சியினா் போராட்டம்

நாம் தமிழா் கட்சியினா் போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் பேருந்து நிலையத்துக்கு வந்து சென்ற அரசுப் பேருந்துகளில் விடுபட்டிருந்த தமிழ்நாடு என்ற வாா்த்தை ஸ்டிக்கரை ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் போராட்டம்
Published on

திருத்துறைப்பூண்டியில் பேருந்து நிலையத்துக்கு வந்து சென்ற அரசுப் பேருந்துகளில் விடுபட்டிருந்த தமிழ்நாடு என்ற வாா்த்தை ஸ்டிக்கரை ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என பெயரை பதிவிடாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதை கண்டித்து, திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில் நாம் தமிழா் கட்சியினா் தமிழ்நாடு என ஸ்டிக்கா் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் நடந்து சென்று தமிழ்நாடு என பெயரை நீக்கிய தமிழக அரசுக்கு எதிரான முழக்கம் எழுப்பி அரசுப் பேருந்துகளை மறித்து தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டினா்.

இதில், திருத்துறைப்பூண்டி பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வினோதினி, மண்டல செயலா் பிஸ்மி காா்த்தி. மாநில இளைஞா் பாசறை செயலா் சரவணன் சுமித், மாவட்ட செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com