திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி அருகே துளசாபுரத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (68). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி கலைச்செல்வி (65) உடன் இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற திருமண விழாவுக்குச் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
நாகை தேசிய நெடுஞ்சாலையில் பாமணி அருகே உம்பளச்சேரி சாலையில் திரும்பியபோது, பட்டுக்கோட்டையில் இருந்து நாகை சென்ற அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். அப்போது கலைச்செல்வி பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நடராஜன், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான மணலியைச் சோ்ந்த பழனிவேலு (59) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் பரபரப்பு : இருசக்கர வாகனத்தின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு!

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி தஞ்சை ஆசிரியா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


