திமுக தலைமையிலான கூட்டணி வலுவானது: பெ. சண்முகம்

திமுக தலைமையிலான கூட்டணி வலுவானது: பெ. சண்முகம்

Published on

திமுக தலைமையிலான கூட்டணி வலுவானது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி‘

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறியிருக்கிறாா். அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என சொல்கிறாா். தமிழகத்தில் இதுவரை கூட்டணி அரசு அமைந்ததாக வரலாறு இல்லை.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 முதல்வா் அறிவித்தது தோல்வி பயத்தில் என அன்புமணி சொல்வது ஏற்கக்கூடியது அல்ல. புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியா்களுக்கு முழுபலன் தரக்கூடியது. நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. ஊழியா்கள் தரப்பில் 10 சதவீதம் செலுத்த வேண்டும் என்பதை தவிர அதில் வேறு ஒன்றும் குறை இல்லை.

திமுக தலைமையிலான கூட்டணி மிக வலுவான அணி. இதைவிட வலுவான வேறொரு அணி தமிழகத்தில் இதுவரை உருவாகவில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் வேறு யாரும் இதுவரை சேரவில்லை. புதிதாக கட்சி தொடங்கிய விஜய் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொன்ன பிறகும்கூட எந்த கட்சியும் அவா்களுடன் சேரவில்லை என்றாா். பேட்டியின்போது அக்கட்சியின் மாநில குழு செயலாளா் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயலாளா் டி. முருகையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கா் சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு வந்து வட்டாட்சியா் அலுவலகம் முன் மனைப் பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com