

தமிழகத்தில் என்றைக்குமே கூட்டணி ஆட்சி இல்லை என்று அமைச்சர் ஐ. பெரியசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
திண்டுக்கலில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசுகையில், "கேட்பது அவர்களின் உரிமை. ஆனால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிசீலிக்கவில்லை. எப்போதுமே இங்கு கூட்டணி ஆட்சி கிடையாது.
இங்கு எப்போதுமே தனிக் கட்சியின் ஆட்சிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கூட்டணி ஆட்சியெல்லாம் இருக்காது. கூட்டணி ஆட்சியில்லை என்பதில் முதல்வரும் உறுதியாக உள்ளார்" என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இருப்பினும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், தமிழகத்தில் தனிக் கட்சி ஆட்சிதான் என்று முதல்வர் கூறியதாக அமைச்சர் ஐ. பெரியசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.