

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற பாஜகவின் தொழில் வல்லுநர்கள் இணைப்பு நிகழ்ச்சியில் நிதின் நபின் பேசுகையில், "திமுக அரசின் நிர்வாகத் தோல்விகளால் தமிழக மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் ஊழலற்ற, வளமான தமிழ்நாடு என்ற முன்னோக்கிய திட்டத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கொண்டுசெல்ல பாஜக தொண்டர்கள் தயாராக உள்ளனர்.
வளர்ச்சியைப் புரிந்துகொள்ளாத திமுக, மாநிலத்தின் கலாசாரத்தையும் மதிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.