~

திருவாரூரில் சமத்துவப் பொங்கல்

திருவாரூா் மாவட்டத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருவாரூா் மாவட்டத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுலாத்துறை சாா்பில் சுற்றுலா பொங்கல் விழா மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

இதில், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்தப்பட்டு, நினைவுப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல், உறிப்பானை உடைத்தல், ஓட்டப்பந்தயம், பாட்டில் நீா் நிரப்புதல், கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

குடவாசலில்...

குடவாசல் பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குணசேகரன் வரவேற்றாா். நிகழ்வில், தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பேரூராட்சிஅலுவலா்கள் மற்றும் மன்ற உறுப்பினா்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com