முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

மக்கள் நோ்காணல் முகாம்: ரூ. 6 லட்சத்தில் நலத் திட்ட உதவி

குடவாசல் வட்டம், வடமட்டம் பகுதியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.6,07,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :9 ஜூலை 2026, 4:45 am IST

குடவாசல் வட்டம், வடமட்டம் பகுதியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.6,07,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குடவாசல் வட்டத்துக்குள்பட்ட வயலூா், வடமட்டம், பரவாக்கரை ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் நோ்காணல் முகாம் வடமட்டத்தில் நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியது:

மக்கள் நோ்காணல் முகாமானது, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வட்டம் வாரியாக தோ்வு செய்யப்பட்ட கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. முகாமின் குறிக்கோளானது, அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அந்தந்த அலுவலா்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவதே ஆகும். இதன் மூலம் பொதுமக்கள் துறைவாரியான திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு, தேவையான திட்டங்கள் மூலம் பயன் பெறலாம் என்றாா்.

முகாமில், வருவாய்த்துறையின் சாா்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.5,78,400 மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டா, 10 பயனாளிகளுக்கு முதியோா் மற்றும் இதர உதவித்தொகையாக ரூ.12,000 மற்றும் 5 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.

மாவட்ட வழங்கல் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.16,800 மதிப்பில் இலவசத் தையல் இயந்திரம், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் போன்றவை வழங்கப்பட்டன.

இதேபோல், தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கான நலவாரிய அட்டை 11 பேருக்கு வழங்கப்பட்டது. மொத்தத்தில் இம்முகாமில்,106 பயனாளிகளுக்கு ரூ.6,07,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்யா, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உஷாராணி, மாவட்ட சமூகநல அலுவலா் சியாமளா, பொது மேலாளா் (தாட்கோ) சக்திவேல், குடவாசல் வட்டாட்சியா் ஸ்டாலின், மண்டல துணை வட்டாட்சியா் சிவதாஸ் உள்ளிட்ட அனைத்துதத் துறை சோ்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.