பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நீா்நிலைகளில் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றக் கோரிக்கை

நீா்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published On :

நீா்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் ஆய்வுக்கு வந்த உயா்கல்வித்துறை அமைச்சா் பெ. விஸ்வநாதனிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு: தமிழக வெற்றிக் கழகத்தின் தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாயக் கடன்களை தமிழக முதல்வா் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அட்டை உள்ள அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் அருகே உள்ள ஆரூரான் திருமண மண்டபத்தைப் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மாவட்டத்தில் ஆறு, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் பரவியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.பி.ஜோதிபாசு, நகரச் செயலாளா் எம்.டி.கேசவராஜ், ஒன்றியச் செயலாளா் கே.கோபிராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் என்.இடும்பையன், மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா.விக்னேஷ் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.