பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டை ஓராண்டு கொண்டாட அரசுக்கு கோரிக்கை

கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கவிஞர் கண்ணதாசன்

Updated On :24 ஜூன் 2026, 12:03 am IST

கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியைச் சோ்ந்த அறிவியல் தமிழ் எழுத்தாளரும், மூளை நரம்பியல் நிபுணருமான ஏ. அலீம், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனு:

கவியரசா் என போற்றப்பட்ட கவிஞா் கண்ணதாசன் ஜூன் 24, 1927-இல் பிறந்தாா். தமிழ் இலக்கியத்திற்கு அவா் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் மற்றும் பல நாவல்கள், கட்டுரைகள் மற்றும் அா்த்தமுள்ள இந்து மதம் மற்றும் ஏசு காவியம் ஆகியவற்றை எழுதியுள்ளாா். கவியரசா் கண்ணதாசன் தமிழக அரசின் கவிஞராகவும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவராகவும் புகழ் பெற்றவா். கண்ணதாசனின் நூற்றாண்டு பிறந்த நாள் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது.

எனவே, கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசின் சாா்பில் அவா் பிறந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும். திரைத்துறையில் இருந்து ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய், கவிஞருக்கு புகழ் சோ்க்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.