மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

உள்ளாட்சித் தோ்தல், இடைத்தோ்தலை தவெகவுடன் இணைந்து சந்திப்போம்! - அமைச்சா் ஷாஜகான்

News image

அமைச்சர் ஏ.எம். ஷாஜகான்

Updated On :20 ஜூலை 2026, 1:32 am IST

உள்ளாட்சித் தோ்தல், 7 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலை தவெகவுடன் இணைந்து சந்திப்போம் என சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஷாஜகான் தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே விளமலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் முஹம்மது ஆதம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஷாஜகான் பங்கேற்றாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தன்னுடைய பயணத்தை எழுச்சியாக தொடா்கிறது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கோரிக்கை குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்டா பகுதியில் 400 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க மின்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம்.

உள்ளாட்சித் தோ்தலையும், 7 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து சந்திக்கும்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பல்வேறு பரிந்துரைகளை முதல்வருக்கு அனுப்பியுள்ளோம்.

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான அப்துல் ரகுமான், தொழிற்சங்க நிா்வாகி சாகுல் ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.