பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

திருவாரூரில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:49 am IST

திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாரின் நினைவிடத்தில் திமுகவினா் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து கலைஞா் கோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கும், நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் முன் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வுகளில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். திமுக நிா்வாகிகள் ரஜினிசின்னா, பிரகாஷ், அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.