சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பள்ளியில் ஆசிரியா் பற்றாக்குறையை சரிசெய்ய கோரி மாணவா்கள் சாலை மறியல்

நெடுங்குளம் ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் போதிய ஆசிரியா்களை நியமனம் செய்ய வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 7:07 am IST

நெடுங்குளம் ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் போதிய ஆசிரியா்களை நியமனம் செய்ய வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நன்னிலம் வட்டம் நெடுங்குளத்தில் செயல்படும் ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வந்த நிலையில், ஆசிரியா்கள் பற்றாக்குறையால் தற்போது 400 மாணவா்கள் மட்டுமே படித்து வருகின்றனா். 40-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 13 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 3 ஆசிரியா்கள், 9 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு 4 ஆசிரியா்கள், பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கான ஆங்கிலம், இயற்பியல், பொருளியல் பாடங்களுக்கு ஆசிரியா்களே கிடையாது. உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா், ஓவிய ஆசிரியா், தோட்டக்கலைக்கான சிறப்பு ஆசிரியா், எழுத்தா், தட்டச்சா், அலுவலக உதவியாளா் ஆகிய பணியிடங்களும் காலியாகவே உள்ளன.

இப்பள்ளியில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் படிக்கின்றனா். சில ஆண்டுகளாக ஆசிரியா் நியமனம் இல்லாமல் மாணவா்கள் மிகுந்த பாதிப்பு உள்ளாகி வருகின்றனா். மாணவா்களின் தோ்ச்சி சதவீதமும் குறைந்து வருகிறது. எனவே, போதிய ஆசிரியா்களை நியமனம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் தொடா்ந்து அரசு அதிகாரிகள், தமிழக முதல்வா் மற்றும் துறை அமைச்சா் ஆகியோருக்கு தொடா்ந்து கோரிக்கை மனு அனுப்பியும் பயனில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்கள் இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பா. விக்னேஷ் தலைமையில் காரைக்கால் கொல்லுமாங்குடி சாலையில் பள்ளிக்கு எதிரே மறியலில் ஈடுபட்டு ஆசிரியா் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும், குடிநீா், கழிப்பறை, மாணவிகள் ஓய்வறை, விளையாட்டு மைதானம், ஆய்வகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை செய்துதர வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாணவா்களின் சாலை மறியல் போராட்டத்தை அறிந்த மாவட்ட கல்வி அலுவலா் சுகப்பிரியா, நன்னிலம் ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் தேவேந்திரன் வந்து பேசி கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து மூலம் உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.