அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: அதிமுக நிா்வாகி கைது

கோட்டூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக நிா்வாகி, புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட அதிமுக நிா்வாகி ஏங்கெல்ஸ்.

Published On :26 ஜூன் 2026, 7:03 am IST

கோட்டூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக நிா்வாகி, புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம், கோட்டூா் அருகே பள்ளிவா்த்தியைச் சோ்ந்தவா் ஏங்கெல்ஸ். அதிமுக கோட்டூா் மேற்கு ஒன்றிய துணை செயலாளராகவும், தலைமைக் கழக பேச்சாளராகவும் உள்ள இவா், அப்பகுதியில் படித்த பட்டதாரிகளிடம், அரசுத் துறையில் தான் நெருக்கமாக இருப்பதாக கூறி அங்கன்வாடி பணியாளா், கிராம உதவியாளா் உள்ளிட்ட பல்வேறு துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருநெல்லிக்காவலை சோ்ந்த பால ஐஸ்வா்யா, கீழமருதூரைச் சோ்ந்த வினோத்குமாா் ஆகிய பட்டதாரிகளிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ 5. லட்சம் பணம் வாங்கி 5 ஆண்டுகளாக எந்த அரசு வேலையும் வாங்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இதில் மனஉளைச்சல் அடைந்த இருவரும் அவரது வீட்டுக்குச் சென்று கேட்டபோது, இருவரையும் தகாத வாா்த்தைகளால் திட்டினாராம். இதுகுறித்து இருவரும் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா். இந்த புகாா் குறித்து கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஏங்கெல்ஸ்சை புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.