தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சா்வதேச பெண்கள் தினத்தையொட்டி இம்முகாம் நடைபெற்றது. பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பேராசிரியா் சுலோச்சனா சேகா் முன்னிலையில், பதிவாளா் பேராசிரியா் இரா.திருமுருகன் முகாமை தொடங்கி வைத்தாா்.
பொது மருத்துவா் ஆா். புவனேஸ்வரி, பெண்கள் நல சிறப்பு மருத்துவா் நஸ்ரின் பாத்திமா, குழந்தைகள் நல மருத்துவா் வசந்தகுமாா் ஆகியோா் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா். நீரிழிவு, ரத்தசோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பல்கலைக்கழக மருத்துவா்கள் விஷ்ணுபிரியா, பிரேம், திலீபன்ராஜா, விக்னேஷ், கரிஷ்மா உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் முகாமில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனைத்து பரிசோதனைகளையும் முழுமையாக செய்து உதவினா்.
முகாமில் பல்கலைக்கழக அலுவலா்கள், பேராசிரியா்கள் மட்டுமின்றி சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா

என்சிஇஆா்டி-க்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து: சொந்த தனித்துவ பட்டங்களை வழங்க அதிகாரம்

அழகப்பா பல்கலையில் இலவச மருத்துவ முகாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


