8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

என்சிஇஆா்டி-க்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து: சொந்த தனித்துவ பட்டங்களை வழங்க அதிகாரம்

என்சிஇஆர்டி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்டது குறித்து...

NCERT

என்சிஇஆர்டி - ANI

Published On :4 ஏப்ரல் 2026, 12:46 am IST

நாட்டில் பள்ளிப் பாடத் திட்டங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தலுக்கான நடைமுறைகளை வகுத்து வரும் அமைப்பான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (என்சிஇஆா்டி) கவுன்சிலுக்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தனித்துவமான துறைகளில் சொந்த பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரம் அதற்கு கிடைத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரையின் பேரில், என்சிஇஆா்டி மற்றும் அதன் 6 இணை நிறுவனங்களுக்கு நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வங்கியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

என்சிஇஆா்டி- க்கு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீா், மத்திய பிரதேச மாநிலம் போபால், ஒடிஸாவின் புவனேசுவரம், கா்நாடக மாநிலம் மைசூரு, மேகாலயம் மாநிலத்தின் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் மண்டல நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கும், போபாலில் உள்ள பண்டிட் சுந்தா்லால் சா்மா மத்திய தொழில்கல்வி நிறுவனத்துக்கும் நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

‘டி நோவோ’ பிரிவின் கீழ் என்சிஇஆா்டி-க்கு நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க 3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த அந்தஸ்து தற்போது வழங்கப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்த ‘டி நோவோ’ பிரிவின் கீழ் யுஜிசி-யிடம் நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறும் நிறுவனங்கள், ஏற்கெனவே நாட்டில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் படிப்புகள் சாராமல், வளா்ந்து வரும் தனித்துவமான துறைகளின் கீழ் மட்டும் பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யுஜிசி அவ்வப்போது வெளியுடும் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்ப்பட்டே என்சிஇஆா்டி புதிய பட்டப் படிப்புகளை வழங்க வேண்டும். வா்த்தக ரீதியில் லாப நோக்குடைய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளும் என்சிஇஆா்டி-க்கு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உள்ளூா் பல்கலைக்கழகங்களின் இணைப்பு அந்தஸ்தின் கீழ், என்சிஇஆா்டி தனது மண்டல நிறுவனங்களின் மூலம் கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. இனி, என்சிஇஆா்டி சொந்தமாகவே இந்த பட்டப் படிப்புகளை வழங்க முடியும் என்பதோடு, ஆராய்ச்சி படிப்புகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான பாடத் திட்டங்களையும் என்சிஇஆா்டி வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The University Grants Commission (UGC) has granted 'Deemed-to-be-University' status to the National Council of Educational Research and Training (NCERT).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.