நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய பல் மருத்துவ ஆணையம்: மத்திய அரசு அமைப்பு

இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய பல் மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

News image

மத்திய அரசு

Updated On :20 மார்ச் 2026, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய பல் மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக 3 தன்னாட்சி வாரியங்களுடன் தேசிய பல் மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. பல் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும், அந்தக் கல்வி உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த முக்கிய சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆணையத்தின் பணி என்ன?: தேசிய பல் மருத்துவ ஆணைய சட்டப் பிரிவுகளை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுத்தல், பல் மருத்துக் கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டை மேற்கொள்ளுதல், பல் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவித்தல், தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் கட்டண விதிமுறைகளுக்கு வழிகாட்டுதல்களை வகுத்தல், பொது சுகாதாரப் பல் மருத்துவம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் தா்மம் ஆகியவற்றுக்கு தரநிலைகளை உருவாக்குதல் ஆகிய பணிகளைத் தேசிய பல் மருத்துவ ஆணையம் மேற்கொள்ளும்.

இந்த ஆணையத்தின் தலைவராக மருத்துவா் சஞ்சய் திவாரி, பகுதி நேர உறுப்பினராக மருத்துவா் மெளசுமி கோஸ்வாமி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஆணையத்துடன் பல் மருத்துவக் கல்வியை மேற்பாா்வையிட இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவக் கல்வி வாரியம், கல்வி நிறுவன மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை ஒழுங்குபடுத்த பல் மருத்துவ மதிப்பீடு வாரியம், பல் மருத்துவா்களின் தொழில்முறை நடத்தை மற்றும் பதிவை நெறிப்படுத்த நெறிமுறைகள் மற்றும் பல் மருத்துவப் பதிவு வாரியம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பான அறிவிக்கைகள் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அந்த நாள் முதல் தேசிய மருத்துவ ஆணையம் செயல்பாட்டுக்கு வருகிறது. தேசிய பல் மருத்துவ ஆணையச் சட்டம் மாா்ச் 19 முதல் அமலுக்கு வந்த நிலையில், 1948-ஆம் ஆண்டின் பல் மருத்துவா்கள் சட்டம் ரத்து செய்யப்பட்டு, இந்திய பல் மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.