சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஓராண்டு பி.எட். படிப்பை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சகம்

ஓராண்டு கல்வியியல் பட்டப் படிப்பை (பி.எட்) மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :23 மார்ச் 2026, 8:35 pm

‘ஓராண்டு கல்வியியல் பட்டப் படிப்பை (பி.எட்) மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியா்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஓராண்டு பி.எட். படிப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் படி, இந்த நடவடிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டது.

இந்த நிலையில், மீண்டும் ஓராண்டு பி.எட். படிப்பை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி இணையமைச்சா் ஜெயந்த் செளதரி எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஆசியிரியா் கல்வியியல் திட்டங்களின் தரம் மற்றும் நடைமுறைகளை வகுக்கும் பொறுப்பை வகிக்கும் என்சிடிஇ-யிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ஓராண்டு பி.எட். படிப்பை மீண்டும் அறிமுகம் செய்வது தொடா்பாக எந்தவொரு திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.