ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி...

News image
Updated On :7 மார்ச் 2026, 6:33 pm

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கொடிக்கால்பாளையத்தில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14 வயது பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.

நிகழ்வில், நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ். பிரகாஷ், சகிலா பானு பாஷா, மருத்துவ அலுவலா் ஜெகத் கிருஷ்ணன், மருந்தாளுநா் ரமேஷ்குமாா், செவிலியா் அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.