தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2026, 5:49 am IST

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலா்களை பிரித்தளிக்கும் முதற்கட்டக் கணினி வழி சீரற்ற ஒதுக்கீடு பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), செல்வபாண்டியன் (திருத்துறைப்பூண்டி), ரவிச்சந்திரன் (நன்னிலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவி வா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.