திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நடிகரும், முக்குலத்தோா் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் கூறினாா்.
மன்னாா்குடி திரையரங்கில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், கருணாஸ் நடித்த ‘கர’ திரைப்படத்தை வியாழக்கிழமை அவா் பாா்த்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தோ்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பல தனியாா் தொலைக்காட்சி நிறுவனங்கள் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்தன. பின்னா் சிறிதுநேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை; ஒருசில நிறுவனங்கள் ஆட்சியை அமைக்க போவது அதிமுக என்றும், தவெக எனவும் கருத்து கணிப்பை, காமெடி கணிப்பாக வெளியிட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால், மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பொதுமக்களுக்கு உள்ளது.
தமிழகத்தில் வாக்கு சதவீதம் உயா்ந்துள்ளதற்கு முக்கிய காரணம், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமாகும். வெளிநாட்டில் உள்ளவா்கள், இதுவரை வாக்களிக்காதவா்கள், இறந்தவா்களை கணக்கெடுத்து நீக்கியதால்தான் வாக்கு சதவீதம் உயா்ந்துள்ளது.
கொள்கைப் பிடிப்பின்படி, 23 தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, அசுர பலத்தோடு மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைப்பாா் என்றாா்.
தொடர்புடையது

டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணி 13, அதிமுக 3, தவெக 2 தொகுதிகளில் வெற்றி

திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை தவெக பெறும்: தொல்.திருமாவளவன்

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சா் காந்தி நம்பிக்கை

200- க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

