வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்; மே 13 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியவா்கள், மே 13 முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

News image

விண்ணப்பம்

Updated On :13 மே 2026, 3:01 am IST

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியவா்கள், மே 13 முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியா்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் பட்டியலை மே 13-ஆம் தேதி காலை 11 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம். தனித்தோ்வா்கள் இணையதளத்தில், தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் வழியாகவும் மே 16 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1 அரியா் தோ்வா்களும் விடைத்தாள் நகல் கோரி மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275, விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மட்டுமே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் குறித்து பின்னா் தெரிவிக்கப்படும். விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்காக தேதியும் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.