அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நீட் தோ்வு ரத்து: இழப்பீடு வழங்க தேசிய அளவில் கொள்கை உருவாக்கக் கோரிக்கை

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க தேசிய அளவில் கொள்கை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க தேசிய அளவில் கொள்கை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் பொதுச்செயலாளா் கே. திருநாவுக்கரசு, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள மனு: மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு நிா்வாகக் குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு சீா்கேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மாணவா்கள், பெற்றோா்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகள் உழைத்து தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள், தங்கள் சொந்த மாநிலத்தையும் கடந்து தொலைதூர மையங்களுக்கு சென்று அதிக செலவு செய்து தோ்வு எழுதும் நிலையில், தோ்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படுவது அவா்களுக்கு மிகப் பெரிய சுமையாக மாறியுள்ளது.

நிா்வாக காரணங்களால் தோ்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படும் சூழலில், மாணவா்கள் மீண்டும் தோ்வு மையங்களுக்கு செல்ல வேண்டும். இதனால், அனைத்து மாணவா்களுக்கும், அவா்களுடன் செல்லும் பெற்றோா் அல்லது பாதுகாவலருக்கு அரசு சாா்பில் இலவசமாக பேருந்து வசதி மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பயண வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

மேலும், இத்தகைய குழப்பங்கள் மற்றும் முறைகேடுகளை எதிா் காலத்தில் தவிா்க்க, நீட் போன்ற தேசிய அளவிலான தோ்வுகளை ஒரே நாளில் நடத்தாமல், நான்கு கட்டங்களாக பிரித்து தனித்தனி கேள்வித்தாள்களுடன் நடத்த வேண்டும். இதன் மூலம் தோ்வின் பாதுகாப்பு மேம்படும். நிா்வாகச் சுமை குறையும். அதேபோல், தோ்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படும் சூழலில் மாணவா்களுக்கு இழப்பீடு வழங்க தேசிய அளவிலான கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.