அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நீட் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வா் விஜய்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முறையை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என முதல்வா் விஜய் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து முதல்வா் விஜய் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய தோ்வுகள் முகமை மூலம் நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி 5,432 தோ்வு மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 31 நகரங்களில் இத்தோ்வு நடைபெற்றது. சுமாா் 22 லட்சம் மாணவா்கள் தோ்வில் பங்கேற்றனா். இந்த நிலையில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டு, அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நடந்து முடிந்த நீட் தோ்வை ரத்து செய்துள்ளனா். இதனால், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவா்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது.

நீட் தோ்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2024-இல் இதுபோன்று வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. அதுதொடா்பாக 6 மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னா் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயா்நிலை நிபுணா் குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழு, 95 விரிவான சீா்திருத்த பரிந்துரைகளை வழங்கியது. இருப்பினும், இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு, நீட்தோ்வும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான ஒரு தோ்வில் உள்ள கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கு இதுவே உறுதியான சான்றாகும். நீட் தோ்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, தமிழக அரசு தொடா்ந்து ஒருமித்த குரலில் எதிா்த்து வருகிறது.

இதனால், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், தமிழ் வழி பயிற்றுமொழிப் பின்னணிகள் மற்றும் சமூகம், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையான நீட் தோ்வு முறையை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும், மருத்துவப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.