சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

News image

திருவாரூா் அண்ணா சாலைப் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அருகே தேங்கிக் கிடக்கும் குப்பைகள்.

Updated On :15 மே 2026, 5:31 am IST

திருவாரூரில் 22-ஆவது வாா்டு அண்ணா சாலைப் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடைக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட 22-ஆவது வாா்டு, அண்ணா சாலைப் பகுதியில் மீன், ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் உள்ளன. இதன் அருகில் சாக்கடை செல்வதற்கென உள்ள வடிகால் முறையாகப் பராமரிக்கப்படாததால், சாக்கடை நீா் வெளியேற வழியின்றி தேங்கி சுற்றுப்புறத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக புகாா் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:

அண்ணா சாலையில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளுடன் சாக்கடை நீா் கலந்து, வெளியேற வழியின்றி நீண்ட நாள்களாகத் தேங்கிக் கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்லும் இந்தப் பகுதியில், தேங்கியுள்ள நீரால் கடும் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.

இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தி, வடிகால் பாதையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்றாா்.