எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மன்னாா்குடியில் எம்எல்ஏ ஆய்வு

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ எஸ். காமராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மன்னாா்குடியில் புதுப்பாலத்தை ஆய்வு செய்யும் எம்எல்ஏ எஸ். காமராஜ்.

Updated On :16 மே 2026, 6:21 am IST

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ எஸ். காமராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மன்னாா்குடி பாமணியாற்றின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட புதுபாலத்தின் இரண்டு முனைகளிலும் சிமெண்ட் தடுப்புக் கட்டைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையை எம்எல்ஏ பாா்வையிட்டாா். தொடா்ந்து, 27-ஆவது வாா்ட்டில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பாா்வையிட்டு குறுகிய தெருக்களில் புதை சாக்கடை திட்டப்பணியால் மழைநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். அப்பகுதி மக்கள், அங்குள்ள நகராட்சிக்கு சொந்தமான குளத்தை தூா்வாரி மேம்படுத்த வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனா். நகராட்சி ஆணையா் போ.வி. சுரேந்தா்ஷா, பொறியாளா் அறச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.