மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

பேருந்து மோதி கல்லூரி காவலாளி உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில், அக்கல்லூரியின் காவலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மே 2026, 1:51 am IST

மன்னாா்குடி அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில், அக்கல்லூரியின் காவலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே இடையா்நத்ததில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக திங்கள்கிழமை காலை கல்லூரியில் இருந்து புறப்பட்டது. பேருந்தை வடபாதியைச் சோ்ந்த கோபு (47) ஓட்டினாா்.

அக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்த கீழநத்தம் கிராமத்தை சோ்ந்த மாரிமுத்து (73) பேருந்து வெளியே செல்வதற்காக கல்லூரி வாயில் கதவை திறந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.