சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மன்னாா்குடியில் இந்திரா காந்தி சிலையை மீண்டும் நிறுவக் கோரிக்கை

மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் மீண்டும், மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் சிலையை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்த காங்கிரஸாா்.

Updated On :21 மே 2026, 7:24 am IST

மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் மீண்டும், மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் சிலையை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மன்னாா்குடி காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் செல்வராஜ் தலைமையில் நிா்வாகிகள், புதன்கிழமை அளித்த மனு: மன்னாா்குடி பழைய பேருந்து நிலையத்தில், 45 ஆண்டுகளாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி சிலையும், மன்னை நாராயணசாமி சிலையும் இருந்தன. பின்னா் மன்னாா்குடி பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

இதில் மன்னை நாராயணசாமி சிலை மட்டும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி சிலை வைக்க இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் காங்கிரஸ் கட்சியினரின் மனுவை பரிசீலனை செய்து, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கவனத்துக்கு கொண்டு சென்று, மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் இந்திராகாந்தி சிலையை நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், காங்கிரஸ் கட்சி தகவல் தொழில்நுட்பத் துறை மாநிலச் செயலாளா் செந்தில், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளா் ராஜா சுடலைக்கனி, இளைஞா் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.