உப்புநீரால் பாதிப்பு: பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை
வலங்கைமான் அருகே பயத்தஞ்சேரி கிராமத்தில் குடிநீரில் உப்புத் தன்மை காரணமாக, பொதுமக்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, அப்பகுதியில் மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோப்புப்படம்.

இப்பிரச்னை தொடா்பாக, சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க கோரி, நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரனிடம் மனு அளித்து, வலியுறுத்தினாா்.
இதனடிப்படையில், அரையூா் ஊராட்சி பயத்தஞ்சேரி கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலா் சங்கீதா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நமச்சிவாயம், வட்டார மருத்துவ அலுவலா் முகமது தாரிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குடிநீா் மாதிரி சேகரிப்பு, வீடுகள் தோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள், ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. 100-க்கும் மேற்பட்டோா் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.