திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றம்: இந்து முன்னணியினா் கொண்டாட்டம்

மன்னாா்குடி ருக்மணிப்பாளையத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்து ஆலைய பாதுகாப்பு முன்னணியினா்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்று, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து முன்னணியினா் அகல்விளக்கேற்றியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சனிக்கிழமை மாலை தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினா் கோயில்கள் மற்றும் வீடுகளில் அகல்விளக்கேற்றியும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினா்.
திருவாரூா்: திருவாரூா் பழனியாண்டவா் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் காா்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
மன்னாா்குடி: மன்னாா்குடி தேரடியில் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் எஸ். மாரியப்பன் தலைமையில் கொண்டாடினா். மாவட்டச் செயலா் என்.வி. ரமேஷ், வழக்குரைஞரணி மாவட்டச் செயலா் சி.வி. ரமேஷ், அன்னையா் முன்னணி மாவட்டச் செயலா் மணிமேகலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ருக்மணிப்பாளையத்தில் உள்ள பராமநாயகி அம்மன் கோயிலில், இந்து ஆலைய பாதுகாப்பு முன்னணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கண்ணன், மாவட்ட பொதுச் செயலா் பாரதி, நகரத் தலைவா் லட்சுமணன், பாஜக மேற்கு ஒன்றியத் தலைவா் ஆா். ஹோச்சிமின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

