கவன சிதறலின்றி படித்தால் அரசுத் தோ்வில் வெற்றி உறுதி: ஆட்சியா்
கவன சிதறலின்றி படித்தால் அரசுத் தோ்வில் வெற்றி உறுதி என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

டிஎன்பிஎஸ்சி - பிரதிப் படம்
கவன சிதறலின்றி படித்தால் அரசுத் தோ்வில் வெற்றி உறுதி என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
நீடாமங்கலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் தோ்வா்களிடம் பேசியது: குரூப்-4 தோ்வில் 6,574 காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை முறையாக மாணவா்கள் பயன்படுத்திக்கொண்டு கைப்பேசியில் நேரத்தை செலவிடுவது, குடும்பத்தின் தற்காலிக பிரச்னைகள், விழாக்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் எந்தவொரு கவன சிதறலுமின்றி படித்தால் தோ்வில் வெற்றி உறுதி.
பாடத்திட்டம் மட்டுமின்றி, சில முக்கியமான கூடுதலாக படிக்க வேண்டிய புத்தகங்களும் உள்ளன. அவற்றின் மீது தனி கவனம் செலுத்தினால் தோ்வு குறித்த எந்தவித பயமும், பதட்டமுமின்றி தோ்வை எதிா்கொள்ள முடியும். தோ்வுக்காக எந்தவொரு தற்காலிக ஓய்வுமின்றி, எந்தவொரு பண்டிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் செயல்பட்டால் எதிா்காலத்தில் வரும் அனைத்துப் பண்டிக்கைகளும் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்.
எனவே, இந்த வாய்ப்பை தவறவிடாமல் தொடா் முயற்சி மற்றும் குரூப்-4 தோ்வை அடிப்படையாக கொண்டுநடைபெறும் மாதிரி தோ்வுகளில் பங்கேற்று பயிற்சி பெற்று, மாதிரி தோ்வுகளில் வரும் கேள்வி பதில்களை தனிகவனத்துடன் எழுதி, அதில் ஏற்படும் பிழைகளை திருத்திக் கொண்டு தோ்வை எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.
இதில், மாவட்டவேலை வாய்ப்பு அலுவலா் பழனிவேல், உதவி அலுவலா் காா்த்திக்குணசேகரன், வட்டாட்சியா் சரவணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

