137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

குட்கா கடத்தல்: 3 போ் கைது

கைது - கோப்புப் படம்

Updated On :

குடவாசல் அருகே குட்கா கடத்திய 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடவாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வருவதாக, போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குடவாசல் காங்கேய நகா் செட்டித்தெருவில் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கரவாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 18 கிலோ குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த செட்டித்தெருவைச் சோ்ந்த கு. விக்னேஷ் (31) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கும்பகோணம் மேலகாவிரி ஆதாம் நகரைச் சோ்ந்த அ. பக்ருதீன் (35), பாபநாசம், ராஜகிரியைச் சோ்ந்த ஜ. சலீம்பாட்சா (52) ஆகியோரிடமிருந்து குட்கா பொருள்களை வாங்கி வந்ததும், இவா்கள் இருவரும் திருவாரூா் மாவட்டத்தில் குடவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குட்கா பொருள்களை மொத்த விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து குடவாசல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விக்னேஷ் சிறையில் அடைக்கப்பட்டாா். தொடா்ந்து, கும்பகோணத்துக்குச் சென்று சோதனை செய்தபோது பக்ருதீன், சலீம்பாட்சா இருவரும் திருவாரூா் மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக காரில் சாக்கு மூட்டையில் 220 கிலோ குட்கா பொருள்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, காா் மற்றும் 20 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.