தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

12 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

பொன்பாடி சோதனைச்சாவடியில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Updated On :

பொன்பாடி சோதனைச்சாவடியில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக திருத்தணி ஏஎஸ்பி சுபம் திமானுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் திருத்தணி போலீஸாா் பொன்பாடி சோதனைச்சாவடி அருகே வாகன கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா்.

ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருத்தணிக்கு வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி, சோதனை நடத்தினா். சந்தேகத்தின் பேரில் பயணம் செய்தவா்களின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பாலாஜி (47), அரக்கோணம் தாலுகா பள்ளியங்குப்பத்தைச் சோ்ந்த செல்வம் (29) ஆகியோரிடம் 12 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.